சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி கைலாசா ரிசர்வ் பேங்க், கைலாசா கரன்சிகள், கைலாசா தங்க நாணயம் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். இதன் பின்னர் சில காலம் அமைதியாக இருந்த அவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் கைலாசாவின் மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். கைலாசாவுக்கு சென்று வர எந்தவித கட்டணமும் இன்றி 3 நாள் விசா இலவசமாக வழங்கப்படுகிறது. எப்படியாவது ஆஸ்திரேலியா வந்து விட்டால் அங்கிருந்து பைசா செலவில்லாமல் கருடா என பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு சென்றுவிடலாமாம்.
மேலும் கைலாசாவில் உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதிகளும் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும். அதோடு ஒருவர் மூன்று நாட்களுக்கு மேல் கைலாசாவில் தங்க முடியாது எனவும் கூறியுள்ளார்.