இந்நிலையில் அதே பகுதியில் வசித்துவந்த பாண்டுரங்கன் என்பவரது மகள் சரண்யாவுக்கும் (20). குமாருக்கும் நேற்று காலை மணமகன் வீட்டில் திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று இரவில் குமாருக்கும், சரண்யாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
வீட்டிலிருந்த உறவினர்கள் எல்லோரும் கதவைத் தட்டினர்.அவர் வெகுநேரமாக கதவைத் திறக்கவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது குமார், தூக்கிட்டு தற்கொலை செய்ததாகத் தெரியவந்ததை அடுத்து புதுமணப்பெண் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.