சென்னையில் இனி வாகனங்களை திருட முடியாது: புதிய டெக்னாலஜியை பயன்படுத்த முடிவு..!

ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (16:34 IST)
சென்னையில் இனி வாகனங்களை திருட முடியாத அளவில் புதிய டெக்னாலஜியை பயன்படுத்த காவல்துறையினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
சென்னையின் பல இடங்களில் அவ்வப்போது இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் திருடு போய் வருவதாக காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் திருட்டு வாகனங்களை கண்டறியும் வகையில் அதை நவீன ஏஎன்பிஆர் என்ற கேமராக்களை பயன்படுத்த சென்னை மாநகர காவல் துறை முடிவு செய்துள்ளது.
 
ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரிகக்னிஷன் என்று கூறப்படும் இந்த டெக்னாலஜி மூலம் திருட்டு வாகனங்களின் எண்கள் கேமராவில் பதிவானதும் காவல்துறைக்கு உடனடியாக தகவல் சொல்லும் வகையில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வகை கேமராக்களை முதல் கட்டமாக சென்னையில் உள்ள 50 இடங்களில் 200 கேமராக்களை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் படிப்படியாக அதிக கேமராக்களை பயன்படுத்த முடிவு செய்யப்படாமல் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்