அடுத்த 48 மணி நேரத்தில் புதிய புயல்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!!

சனி, 3 டிசம்பர் 2016 (14:35 IST)
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய புயல் ஒன்று உருவாகி வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


 

 
தென்மேற்கு வங்க கடலில் நாடா புயல் உருவாகி, அது காரைக்கால் அருகில் நேற்றுக் காலை கரையைக் கடந்தது. இதனால், கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில், மலேசிய தீப கற்ப பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. 
 
இது வலுவடைந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இது வரும் 9ம் தேதி ஆந்திராவிற்கும் ஒடிசாவிற்கும் இடையில் கரையைக் கடக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புயல் தமிழக கடற்கரை நோக்கி வந்தால், பலத்த மழை தமிழகத்தில் பெய்யும். 

வெப்துனியாவைப் படிக்கவும்