தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வன உயிர்களாக அறிவிக்கப்பட்ட பல பறவைகள் மற்றும் விலங்கினங்களை பலர் பணத்திற்காக வேட்டையாடுவதும், பிடித்து விற்பனை செய்வதும் தொடர்ந்து வருகிறது. இதுபோன்று வன உயிர்கள் தொடர்பாக நடைபெறும் குற்றங்களை தடுக்க தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உதாரணமாக, பச்சைக் கிளிகள் பாதுகாக்கப்பட்ட வன உயிர்கள் பட்டியலில் உள்ளது. அவற்றை வீடுகளில் வளர்க்கவும் தடை உள்ளது. மக்களுக்கு தொடர்ந்து இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில்தான் புதிதாக TNFWCCB (Tamil Nadu Forest and Wildlife Crime Control Bureu) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இன்று இந்த புதிய அமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். வன உயிர் தொடர்பான குற்றங்களை கண்டறியவும், வன உயிர்களை பாதுகாக்கவும் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.