ஆர்.கே.நகரில் உள்ள ஒவ்வொரு தெருவாக செல்லும் தினகரன் கோஷ்டியினர் முதலில் அந்த பகுதியில் உள்ள மளிகை கடைகளுக்கு சென்று அந்த கடையில் மாதந்தோறும் மளிகை சாமான்கள் வாங்குவது வாடிக்கையாளர்கள் யார்? அவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு வாங்குகிறார்கள் போன்ற விவரத்தை சேகரித்து அதன்பின்னர் அந்த வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு சென்று உங்களது மளிகைக் கடை பில்லை செட்டில் செய்துவிட்டோம், நீங்கள் தொப்பிக்கு வாக்களியுங்கள் என்று கூறி வருகின்றார்களாம்
தினகரன் கோஷ்டி கடைபிடிக்கும் இந்த யுக்திகளை பார்த்து திமுக, ஓபிஎஸ் அணிகளை வெலவெலத்து உள்ளதாகவும். இப்படியெல்லாம் கூடவா யோசித்து வாக்காளர்களை வளைக்க முடியுமா? என்று அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.