தீபக், தீபா, அமிர்தா வரிசையில் தற்போது ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு புறப்பட்டுள்ளார் ஜெயலலிதாவின் மாற்றாந்தாயின் மகன் மைசூர் வாசுதேவன். இது குறித்து அவர் பேட்டி அளித்தது பின்வருமாறு...
எனது பொருளாதார நிலையை சரி செய்ய எனக்கு ஜெயலலிதாவின் சொத்துகளில் பங்கு தேவைப்படுகிறது. இதற்காக சட்டப்படி அணுகியுள்ளேன். ஜெயலலிதா ரூ.35,000 கோடியை விட்டு சென்றுள்ளார் என்று கூறுகிறார்கள். ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலாதான் காரணம் என்ற போது அந்த சொத்தையும் அவர் வைத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.