நெல்லை மாநகராட்சி மேயரை எதிர்த்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி மாநகராட்சியில் பணிகள் எதுவும் நடக்கவில்லை, மேயர் மீது பண மோசடி குற்றச்சாட்டு என அடுக்கக்கான புகார்களுடன் 35 திமுக கவுன்சிலர்கள் திருச்சியில் முகாமிட்டனர்.
நாளை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக தொடரும் சிக்கல்களால், நெல்லை மாநகர மேயரை மாற்ற வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.