மூளைகெட்ட தனமான அறிவுக்கெட்ட செயல். அரசியல் விமர்சகர் ஆத்திரம்

புதன், 10 மே 2017 (06:53 IST)
சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் நடைபெற்ற அராஜகங்கள் நாடறிந்தது. மாணவர்களை தீவிரவாதிகள் போல சோதனை செய்த நீட் அதிகாரிகள், மாணவர்களின் தேர்வு எழுதும் மனநிலையை பாதிக்க வைத்து மன அழுத்தத்தை கொடுத்தனர்.



 


இதுகுறித்து அரசியல் விமர்சகர் சுமந்த் அவர்கள் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறும்போது, 'நீட் தேர்வில் மாணவர்கள் சோதனைக்குள்ளான விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. மூளைகெட்டத்தனமான, அறிவுகெட்ட ஒரு செயல். ஜீன்ஸ் பேண்டில் இரும்பு பட்டன் வைக்ககூடாது, உள்ளாடையில் இரும்பு ஹூக் இருக்க கூடாது என்றெல்லாம் ரூல்ஸ் போட்டுபவர்களை மனநிலை சோதனை தான் நடத்த வேண்டும்

இதுகுறித்து பெற்றோர் அல்லது மாணவர்கள் வழக்கு தொடர்ந்தால் கண்டிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஒரு விதிமுறையை பின்பற்றும்போது, அந்த விதிமுறை குறித்து முதலில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் தேர்வு நாளில் திடீரென உள்ளாடை அவிழ்ப்பது உள்பட அராஜ நிகழ்ச்சியில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்