நீட் தேர்வு 10 வருடம் கழித்து தான் தமிழகத்தில்: காங்கிரஸ் எம்எல்ஏ யோசனை!

செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (10:17 IST)
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. ஆனால் அதையெல்லாம் தாண்டி நீட் தேர்வை கட்டாயமாக தமிழகத்தில் புகுத்தியுள்ளனர். இந்நிலையில் மாணவி அனிதாவின் மரணத்திற்கு பின்னர் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் வலுவாக எழுந்துள்ளது.


 
 
தொடர் போராட்டங்கள் நடைபெற்று தான் வருகிறது. நீட் தேர்வு கூடாது எனவும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனால் முன்னர் இருந்ததை விட தற்போது நீட் தேர்வு எதிர்ப்பு குறித்தான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில் இந்த நீட் தேர்வு தமிழகத்துக்கு இப்போது வேண்டாம் எனவும், இன்னும் 10 வருடம் கழித்து வந்தால் போதும் எனவும் காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் கூறியுள்ளார்.
 
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ வசந்தகுமார் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தில் நேற்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு இப்போதைக்கு வேண்டாம். இன்னும் பத்து வருடங்கள் கழித்து கொண்டு வரலாம். அதற்குள் மாணவர்கள் அதை எதிர்கொள்ளும் தகுதிக்கு வந்துவிடுவார்கள் என யோசனை ஒன்றை கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்