மாணவிகளை நிர்வாணப்படுத்திய காவல் துறை: நெடுவாசல் பெண் போராளி புகார்!

சனி, 22 ஏப்ரல் 2017 (15:37 IST)
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற இரண்ட மாணவிகளை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்து நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.


 
 
கடந்த 15-ஆம் தேதி வளர்மதி மற்றும் சுவாதி என்னும் இரண்டு மாணவிகள், மூன்று மாணவர்களுடன் கோவையில் இருந்து நெடுவாசல் போராட்டத்துக்கு ரயில் மூலம் பயணம் மேற்கொண்டனர்.
 
அப்போது அவர்கள் ரயிலில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பறை அடித்து பாட்டு பாடியும், பதாகைகளை தாங்கியவாரும் துண்டு பிரசுரங்களை மற்ற பயணிகளுக்கு விநியோகித்தவாறும் பயணம் செய்தனர்.
 
இதனால் இவர்களை கைது செய்ய திட்ட மிட்ட போலீசார் குளித்தலையில் வைத்து 5 மாணவர்களையும் மாவோஸ்ட் இயக்கத்தை சார்ந்தவர்கள், பொதுமக்களிடையே வன்முறையை தூண்டுகிறார்கள் என கூறி கைது செய்தனர்.
 
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவிகளை பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் வழக்கறிஞர் ராஜா கூறும்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களை காவல்துறையினர் நிர்வாணப்படுத்தி துன்புறுத்துவதாக மாணவிகள் கூறியதாக தெரிவித்தார்.
 
மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள இவர்கள் வெளியே வந்த பின்னர் சிறை அதிகாரிகள் மீது வழக்கு பதியப்படும் என வழக்கறிஞர் ராஜா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்