வம்சம் படத்தில் அறிமுகமான நந்தினி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்தார். மேலும் சில ரியாலிட்டி ஷோக்களிலும் சீரியலிலும் நடித்துவந்தார்.
கைதுக்கு பயந்து நந்தினியும் அவர் தந்தையும் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால், நந்தினியும் அவர் தந்தையும் எந்நேரத்திலும் கைதாகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.