3 ஆவது கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக உடனடியாக முடிவு எடுக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

புதன், 7 அக்டோபர் 2015 (12:29 IST)
உதகையில் 3 ஆவது கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுவது தொடர்பாக உடனடியாக முடிவு எடுக்கப்படும் என்று திமுக பொருளாளளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
நமக்கு நாமே பயணத்தின் இரண்டாவது கட்டத்தை மு.க.ஸ்டாலினின் நீலகிரி மாவட்டத்தில் இன்று தொடங்கினார்.
 
இந்த பணத்தின்போது, கூடலூர் பகுதியில் ஸ்டாலின் பேசுகையில், "கூடலூர் பகுதியில் உள்ள விரிவு 17 இல் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்குவதற்கு திமுக ஆட்சி காலத்திலேயே முடிவு எடுக்கப்பட்டது. 
 
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டிருந்தது. இந்நிலையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரிவு 17 இல் உள்ள 35 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும்." என்று கூறினார்.
 
மேலும், "உதகை ஏரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பாகவும், உதகையில் 3ஆவது கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுவது தொடர்பாகவும் உடனடியாக முடிவு எடுக்கப்படும்."  என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்