வண்டலூர் அருகேயுள்ள நல்லம்பாக்கம் ஏரி உடைந்தது

சனி, 28 நவம்பர் 2015 (11:20 IST)
சென்னையை அடுத்துள்ள வண்டலூர் அருகேயுள்ள நல்லம்பாக்கம் ஏரி உடைந்ததால் தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்தது.


 

 
வண்டலூர் அருகேயுள்ள நல்லம்பாக்கம் ஏரி 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய ஏரியாகும்.
 
கடந்த 2 வார காலமாக பெய்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்த கனமழை காரணமாக இந்த ஏரி உடைந்துள்ளது.
 
இதனால், நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதைத் தொடர்ந்து ஏரி, குளங்களின் உறுதியின்மை காரணமாக சில ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்து வருகின்றது.
 
கடந்த ஆகஸ்ட்டு மாதம் நல்லம்பாக்கம் ஏரியில் ராட்சத பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு மண் அள்ளப்பட்டது.
 
இதனால், அருகிலுள்ள கிராம மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மண் அள்ளிய வாகனங்களைணம் சிறைபிடித்தனர்.

மேலும், ஏரியில் நீர் நிறையும்போது கரைகள் பலவீணமடைந்து உடைந்தவிடவும் வாய்ப்பு ஏற்படும் என்று கூறி போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்