25 ஆண்டு கால சிறை வாழ்க்கை - சுயசரிதை வெளியிடும் நளினி

ஞாயிறு, 20 நவம்பர் 2016 (11:11 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நளினி, தனது சுயசரிதையை வெளியிட உள்ளார்.


 

 
ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது, கொலையாளிகளுக்கு உதவியதாக கூறி முருகன், அவரின் மனைவி நளினி, பேரரறிவாளன் உட்பட 7 பேர் கைது செய்யப்படனர். கடந்த 25 வருடங்களாக அவர்கள் சிறையில் வாடி வருகின்றனர்.
 
இதில், கருணை அடிப்படையில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி நீதித்துறையிடம் போராடி வருகிறார். மேலும், அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில், நளினி, தன்னுடைய வாழ்க்கையை சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார். 500 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தில், தனது குழந்தை பருவம், முருகனுடன் ஏற்பட்ட காதல், அவரின் திருமணம், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிக்கியது, சிறையில் நடந்தவை என தன்னுடைய 25 கால வாழ்க்கையை பற்றி தெளிவாக எழுதியுள்ளாராம்.
 
அவரின் சுயசரிதை புத்தகம், வருகிற 24ம் தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்