ஹலோ நவநீத கிருஷ்ணன் எம்.பி யா? நீங்க சொன்னத இன்னும் நிறைவேத்தல; கலாய்க்கும் நெட்டிசன்கள்

வெள்ளி, 30 மார்ச் 2018 (13:35 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வோம் என ராஜ்யசபாவில் பகிரங்கமாக அறிவித்த அதிமுக எம்.பி நவனீத கிருஷ்ணனை பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.


 
 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கொடுத்த 6 வார கெடு நேற்றோடு முடிவடைந்தது. ஆனாலும், மத்திய அரசு எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. இது தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் போனால் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என நவநீதகிருஷ்ணன் ராஜ்யசபாவில் பேசினார்.
இந்நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மாபெரும் துரோகத்தை செய்து விட்டது.  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் போனால் எம்.பி,க்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்வோம் என பேசிய அதிமுக எம்.பி  நவநீதகிருஷ்ணணை தற்பொழுது பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
 
சிலர் எம்.பி. ஆபீசுக்கு எலி மருந்தை அனுப்ப ஆரம்பித்துள்ளனர். பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரன் அலுவலகத்திற்கு யாரோ எலி மருந்தை அனுப்பி வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்