தூத்துக்குடி மாநகராட்சி மேயர், அதிமுகவின் மகளிரணி தலைவி, மாநிலங்களவை உறுப்பினர் என குறுகிய காலத்தில் அடுத்தடுத்து கட்சியால் உச்சத்துக்கு போன சசிகலா புஷ்பா, போன வேகத்தில் சறுக்கி விழுந்துவிட்டார்.
எந்த கட்சி தன்னை தூக்கிவிட்டதோ, அதே கட்சியால் தனது உயிருக்கு ஆபத்து என கூறும் அளவுக்கு வந்துவிட்டது சசிகலா புஷ்பாவின் நிலமை. இந்த நிலமைக்கு சசிகலா புஷ்பா வந்ததற்கு அவரை தவிர வேறு யாரும் காரணம் இல்லை என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.
ஆண் நண்பருடன் சர்ச்சைக்குறிய உரையாடல், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம், எதிர்கட்சி உறுப்பினர்களுடன் நட்பு, முத்தாய்ப்பாக விமான நிலையத்தில் திருச்சி சிவாவை தாக்கியது என தன்னுடைய இந்த நிலைக்கு அவரே காரணம் வகுத்தார் சசிகலா புஷ்பா என கூறுகிறார்கள் அதிமுகவினர்.