அந்த ஆபாச வீடிவோவை ஜெயா டிவியில் போடக் கூடாது : பெரியகருப்பன் வழக்கு

புதன், 11 மே 2016 (09:27 IST)
திமுக முன்னாள் அமைச்சரான பெரியகருப்பன் சம்பந்தபட்டதாக வெளியான ஆபாச வீடியோவை ஜெயா டிவி ஒளிபரப்ப தடைவிதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


 

 
திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் கே.ஆர்.பெரியகருப்பன். இவர் தற்போது திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
 
இவர், ஒரு பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. ஆனால், அதில் இருப்பது நான் இல்லை என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். 
 
அந்த மனுவில் “நான் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறேன். நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று பல்வேறு ஊடகங்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், நான் ஒரு பெண்ணுடன் இருப்பதாக ஒரு ஆபாச வீடியோவை, உள்நோக்கத்துடன் ஜெயா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ, நவீன டிஜிட்டல் முறையில் என் உருவத்தை பொய்யாக சித்தரித்து, தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, தேர்தலில் என் வெற்றி வாய்ப்பை சீர் குலைக்க திட்டமிடுகின்றனர். எனவே அந்த ஆபாச வீடியோவை ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்