"பல கோடி மோசடி" -நள்ளிரவில் பாரிவேந்தர் வீடு முற்றுகை

வியாழன், 2 ஜூன் 2016 (07:10 IST)
எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்க்க வேந்தர் மூவிஸ் மதனிடம் பல லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததை மீட்டுத்தருமாறு, எஸ்.ஆர்.எம். கல்வி குழும நிறுவனர் பாரிவேந்தர் வீட்டை மாணவர்களும், அவரது பெற்றோர்களும் முற்றுகையிட்டனர்.
 

 
சென்னை, வளசரவாக்கம், சவுத்ரி நகர் பகுதியில் எஸ்ஆர்எம் கல்வி குழும நிறுவனர் பாரிவேந்தர் வீடு உள்ளது. அவரது வீட்டை  நேற்று இரவு சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 
அப்போது, எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்க்க வேந்தர் மூவிஸ் மதனிடம் பல லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததை, மீட்டுத்தருமாறு அவர்கள் கோஷமிட்டனர். இந்த தகவல் அறிந்த வளசரவாக்கம் போலீசார் அவர்களிடம் சமதானம் பேசி கலையவைத்தனர்.
 
இதனையடுத்து, இன்று பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று  திரண்டு முதல்வர் அலுவலகத்தில் முறையிட முடிவு செய்துள்ளார்களாம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்