வெறுப்பை விதைப்பவர்களை வள்ளுவர் மதிப்பதேயில்லை! – ஆளுனருக்கு சு.வெங்கடேசன் பதில்!

வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (13:05 IST)
திருக்குறள் குறித்தும், ஜியு போப் குறித்தும் ஆளுனர் ஆர்.என்.ரவி பேசியது குறித்து எம்.பி. சு.வெங்கடேசன் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி, தமிழ் புலவர் திருவள்ளுவரின் சிலையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் திருவள்ளுவர் குறித்தும் திருக்குறளை மொழிபெயர்த்த ஜியு போப் குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ALSO READ: திருக்குறளின் ஆன்மாவை கெடுத்த மிஷனரி ஜி.யு.போப்!? – ஆளுனர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
 
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆளுனருக்கு பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சனாதனத்தை தோலுரித்த திருவள்ளுவர் பற்றியும், 40 ஆண்டுகளாக தமிழ் தொண்டாற்றிய ஜி யு போப் பற்றியும் பாடம் எடுக்கும் ஆளுநரே! கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை படித்துப்பாருங்கள்!

ஆன்மீகத்தின் பெயரால் வெறுப்பை விதைப்பவர்களை வள்ளுவர் மனிதனாகவே மதிப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உளறல்களை நிறுத்துங்கள்!” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்