குத்தம் மட்டும் சொல்லாமல் கொடுக்கவும் தெரிந்த அன்புமணி: 3 கோடி நிதி!!

புதன், 25 மார்ச் 2020 (15:03 IST)
அன்புமணி ராமதாஸ் தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் ரூ.3 கோடி வழங்க முன்வந்துள்ளார். 
 
பாமக இளைஞரணி தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கொரோனா குறித்து அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டினாலும் இதை இவ்வாறு செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் என ஆலோசனையும் கூறிவந்தார். 
 
இந்நிலையில் அவர் தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவ கருவிகள் வாங்க ரூ.3 கோடி வழங்க முன்வந்துள்ளார்.  அதாவது தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து ரூ.3 கோடியை ஒதுக்கியுள்ளதாகவும், தேவைப்பட்டால் இன்னும் நிதி ஒதுக்க தயராக உள்ளதாகவும் அறிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர், கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் திமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்