சிம்பு தம்பியிடம் சத்தியம் செய்ய சொல்லி கேட்ட அம்மா

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (14:12 IST)
’இது நம்ம ஆளு’ படம் மூலம் இசை அமைப்பாளராக அவதாரம் எடுத்தவர் சிம்புவின் தம்பி குறளரசன்.


 


இவர் தற்போது, ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில், அவரது அம்மா, உஷா ராஜேந்தர், குறளை அழைத்து பூஜை அறையில் அமர வைத்து ”நீ அப்பா போல் நல்ல பெயர் வாங்க வேண்டும்.உன்னால் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நன்றாக இருக்கவேண்டும் சத்தியம் செய்து கொடு” என்று கேட்டதாக கூறுகின்றனர்.

மூத்த மகன் சிம்பு, சினிமாவிலும், காதல் வாழ்க்கையிலும் எடுத்த கெட்ட பெயர்களினால் ஏற்பட்ட அதிருப்தியினால் தான், அவர், குறளை அழைத்து, அவரிடம் சத்தியம் செய்ய சொல்லி கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், நீண்ட யோசனைக்கு பிறகு தான், அம்மாவிடம், ”நான் நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறேன்” என குறல் வாக்குறிதி கொடுத்ததாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்