மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் கொள்ளுப்பேத்தியின் ( மகள் செல்வியின் மகள் ) திருமணத்தில் நடிகர் கலந்துகொண்டார். இந்த விஷயம் தமிழக அரசியல் வட்டாரத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. முக்கிய பேசுபொருளாகவும் உள்ளல்து. இந்நிலையில் நடிகர் விஜயை முக, ஸ்டாலின் சந்தித்ததால் எந்த பாதிப்பும் இல்லை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், கலைஞரின் மகள் செல்வியின் மகளின் திருமணவிழாவில் நடிகர் விஜய் கலந்துகொண்டார்.அப்போது விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகனனை சந்தித்து பேசியதாகவும், இது அரசியல் தொடர்பான பேச்சாகவும் இருக்கலாம் எனவும் ஊடகங்களில் தகவல் பரவியது. ஆனால் இது குறித்து விஜய் தரப்பும், திமுக தரப்பிலும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.