3000 மாணவர்களின் மதிப்பெண்கள் பூஜ்யம்.. திருவள்ளுவர் பல்கலை தேர்வு முடிவில் வினோதம்..!

வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (12:45 IST)
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அதில் சுமார் 3000 மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண்கள் பூஜ்ஜியமாக இருந்ததை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் பலர் நிர்வாகத்தினர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மேலும் கல்லூரியில் இருந்து விலகி டிசி வாங்கி சென்ற மாணவர் ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அவரது மதிப்பெண் பட்டியல் வெளியாகி இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இது குறித்து கல்லூரி பேராசிரியர்கள் கூறும்போது இளநிலை கணினி படித்த  சதீஷ்குமார் என்ற மாணவர் கல்லூரியில் இருந்து விலகி டிசி வாங்கி சென்று விட்டார். ஆனால் அவர் தற்போது ஐந்தாம் பருவ தேர்வு எழுதியதாகவும் அவருடைய மதிப்பெண்ணிடம் வெளிவந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்
 
இதை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கல்லூரிக்கு வராமல் தேர்வு எழுதாமல் இருந்த பல மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்றும் பல்கலைக்கழக மாணவர் மதிப்பெண்களில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர் 
 
மேலும் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பூஜ்யம் மதிப்பெண் எப்படி பெற முடியும் என்றும் இது குறித்து விவரங்களை எங்களுடன் பகிருங்கள் என்றும் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்