இந்த நிலையில் இன்று சென்னை மீனம்பாக்கத்தில் 105.8°F வெப்பநிலை பதிவாக வாய்ப்பு என தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வேலூரில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.