மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தமிழகம் முழுவதிலும் இருந்து 100 புகார்கள் வந்துள்ளதாக தகவல்!

புதன், 2 ஜூன் 2021 (08:09 IST)
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் மேலும் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்
 
இந்தநிலையில் ஆசிரியர்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவிகள் புகார் அளிக்கலாம் என துணை கமிஷனர் ஜெயலட்சுமி அவர்களின் வாட்ஸ்அப் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு இதுவரை தமிழகம் முழுவதிலிருந்தும் 100 புகார் வந்துள்ளதாகவும் இதில் 22 புகார்கள் சென்னையில் இருந்து வந்தவை என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த புகார் கூறிய ஆதாரங்கள் இருந்தால் கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அது மட்டுமன்றி குழந்தைகள் நல ஆணையத்தின் விசாரணைக்கும் இந்த புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன
 
இதனையடுத்து சென்னையில் உள்ள சில முக்கிய பள்ளிகள் குழந்தைகள் நல ஆணைய விசாரணை வளையத்தில் வந்துள்ளது என்றும், ஒரு சில பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நடவடிக்கையை அடுத்து பல மாணவிகள் தைரியமாக புகார் கொடுத்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்