நடிகர் ரித்தீஷ் மீது பண மோசடி புகார்

ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (04:20 IST)
நடிகரும், முன்னாள் திமுக எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

 
சென்னையைச் சேர்ந்த ஆதிநாராயண சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தான் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் என்றும், அமெரிக்க நிறுவனத்தில் பணியாற்றியபோது ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு நிறுவனம் தொடங்குவதாக கூறி ஜே.கே.ரித்தீஷ் 3 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
மேலும், இதனை வங்கி மூலமாக அளித்ததாகவும், ஆனால் குறிப்பிட்டப்படி நிறுவனம் தொடங்காமல் ஏமாற்றிவிட்டதாகவும், சென்னை காவல் ஆணையர் அலுவலகம், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடமும் கடந்த ஆண்டு புகார் அளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
 
எனவே ஜே.கே.ரித்தீஷ் என்ற சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டு வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த மனு வரும் திங்கள்கிழமை உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்