இரக்கமே இல்லாமல் நடந்துகொண்ட ஆட்சித்தான் மோடி ஆட்சி- கே.பாலகிருஷ்ணன்

Sinoj

செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (19:45 IST)
தமிழ்நாட்டுடனான எனது தொடர்பு அரசியல் சார்ந்தது அல்ல. அது இதயப்பூர்வமானது என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்னன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஜூலை மாதம், ராமேஸ்வரத்தில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் தொடங்கப்பட்டது என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணம்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடைபயண்ம இன்று திருப்பூரில்  நிறைவடைந்தது.
 
இந்த  நடைபயணத்தின் நிறைவு விழாவாகவும்,  மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் பிரசார தொடக்கமாகவும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில்  நடந்து வருகிறது. பிரதமர் மோடி, அண்ணாமலை, தமிழருவி மணியன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாஜகவினர் பங்கேற்றனர்.
 
இந்த நிகழ்ச்சியில்  பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி,  2024 ல் அதிகமாகப் பேசப்படும் கட்சியாக பாஜக உள்ளது. 
 
மேலும், தமிழ் நாட்டில் கொங்கு மண்டலம் தான் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. தமிழ்நாட்டுடனான எனது தொடர்பு அரசியல் சார்ந்தது அல்ல. அது இதயப்பூர்வமானது என்று தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்னன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:'' தமிழ் நாட்டில் ஒருபோதும் ஆட்சியில்லை என்றாலும் பாஜகவின் இதயத்தில் தமிழ் நாடு இருக்கிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார். ஆனால், புயல், வெள்ளம் எனத் தமிழ் நாடு  இயற்கைப் பேரிடர்களால் தவித்தபோது, இதயத்தில் இரக்கமே இல்லாமல் நடந்துகொண்ட ஆட்சித்தான் மோடி ஆட்சி என்பதை தமிழ் நாட்டு மக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்'' என்று தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்