நாடு பார்த்தது உண்டா இந்த நாடு பார்த்தது உண்டா ?
இதயம் என்பது தசைகளாலும், இரத்தங்களாலும், நாளங்களாலும் ஆனது. அது எளிதில் இளகும் தன்மை உடையது. இது சாதாரண மனிதனுக்கு தான். வரலாற்றில் சில நீரோக்களின் இதயமும், சில ஹிட்லர்களின் இதயமும், கடும் கல்களால் ஆனது. நமது பிரதமர், நீரோவிடம் இதயத்தை இரவலாக பெற்று இருக்கிறார் போலும். அதனால் தான் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை அவர் கண்டு கொள்வதேயில்லை. அவர் மனம் கல்லாகி போனது.
லட்சம் கோடிகள் அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும், கார்பரேட்களுக்கும் கடன்களை தள்ளுபடி செய்யும் போது அகல விரிந்த அவர் கண்கள், விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி என வரும் போது காந்தாரியைப் போல கண்களை கட்டி கொள்வார் போலும்.வரலாறு காணாத வறட்சி நிலவும் போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேச தம்பி துரையை அழைத்து பேசுகிறார். மைத்திரேயனை அழைத்து பேசுகிறார். ஆனால் விவசாயிகளை அழைத்து பேச மாட்டார். பேச மனம் இல்லையா ? பேச மனம் வரவில்லையா ?