பிணங்களை தின்னும் பிணங்களின் அரசு!

வெள்ளி, 10 மார்ச் 2017 (15:37 IST)
மாவீரன் பிரிட்ஜோவிற்கு சமர்பணம்..
 
இது பிணங்களை தின்னும் பிணங்களின் அரசு என்பதற்கான மற்றொரு உதாரணம்  நம் சகோதரர்   பிரிட்ஜோவின் வீர மரணம்!  பிரிட்ஜோவின் மரணம் ஏதோ தற்செயலாக நடந்தது அல்ல.  திட்டமிட்ட படுகொலை.  56 இஞ்சு மார்பு தன்  சுற்றளவை 0  இஞ்சு ஆக சுருங்கி கொண்டதன் விளைவு தான் பிரிட்ஜோவின் வீர மரணம் !


 
 
தங்கச்சி  மடத்தில் போராட்டம் செய்கிறானே,  அவன் மட்டும் நீதி கேட்க வில்லை! பிரிட்ஜோவின் மரண துயரம்,  தமிழர்கள் அனைவருக்கும் ஆன ஒரு துயரம்.  இது ஏன் ஏற்பட்டது என்றால்,  உயிரோட்டம் இல்லாத பிணத்தின் ஆட்சி இது.   அதன் அவல நிலை பிரிட்ஜோவின் வீர மரணம்!. மத்திய உள்துறை,   வெளியறவு துறை  போன்ற அமைச்சகங்கள் எல்லாம் தமிழர்களுக்காக  பேசி  பல நாட்கள் ஆகி விட்டது. இது ஒளிரும் இந்தியா அல்ல!  மிளிரும்  டிஜிட்டல் இந்தியாவும் அல்ல!  நம்ப முடியாத இந்தியா!  நம்ப முடியாத  மோடி  
 
ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு,  மீனவர் படுகொலை அனைத்திலும் தமிழர்களின் ஏகோபித்த பாராட்டுக்கள், இந்த பிண அரசின் மீது தமிழர்களால் சூடப்படும் மலர் மாலைகள்.  
 
பிண அரசின் ராஜ குருமார்களில் மூத்தவர்  பொறுக்கி புகழ் ஸ்வாமி, கட்டுமரம் ஏறி சென்று சண்டை இட சொல்கிறார். அவர் oxford இல் படித்ததால் அவர்க்கு தெரியவில்லை என்று  நினைக்கிறேன்.  கடல் கொண்டு,  கடல் வென்ற சோழன் எம் தோழர்களின் மும் பாட்டன் என்று.


 
 
இன்று தமிழக மீனவர் படுகொலை பற்றி பேச மாநிலங்களவை ஒதுக்கிய நேரம் மூன்று நிமிடங்கள். செத்தவன் தமிழன் தானே! மூன்று நிமிடங்கள் அதிகம்தான். பழைய பாத்திரத்திற்கு ஈயம் பூசுவது போல,  இந்த அரசு பிணத்திற்கு மேக்கப் போடுகிறது. 
 
தற்போது, பிரிட்ஜோவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட் ஒட்டி கொண்டிருக்கிறார்கள் நம் நவீன தேச பக்கத்தால்களும் அவர்களின்  டிஜிட்டல் நாயகனும்.  பிரிட்ஜோகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டும் மோடி அரசு, எங்களுக்கு தேவை இல்லை.
 
பிணத்தின் கையில் கொடுக்கப்பட்ட வெற்றிலை யார்க்கும் தெரியாது. அது போலதான் இந்த அரசு வாய் மூடி, கண்களை மூடி, கைகளை மூடி, சிறப்பாக கையாளுகிறது பிரிட்ஜோக்களை.
 
யார் சொன்னது? படை கொண்டு, சாம்ராஜ்யங்களை வென்று, அரசாண்ட நெப்போலியன் மட்டும் மாவீரன் என்று. 
 
நாம் சகோதரன்  பிரிட்ஜோவும் மாவீரனே  !

 










 
இரா.காஜாபந்தாநவாஸ் 
பேராசிரியர் 
[email protected]

வெப்துனியாவைப் படிக்கவும்