திமுக (செயல்)தலைவராகிறார் ஸ்டாலின்?: துரை முருகனுக்கும் பதவி?

புதன், 30 நவம்பர் 2016 (13:20 IST)
திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் முதுமை காரணமாக பொதுநிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்பதில்லை. இதனால் திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கும், துரை முருகனுக்கும் புதிய பதவிகள் வழங்கப்படும் என தகவல்கள் வருகின்றன.


 
 
அண்மையில் நடந்த இடைத்தேர்தலில் கூட திமுக தலைவர் கருணாநிதி பிரச்சாரம் செய்யவில்லை. இந்நிலையில் கட்சியை பலப்படுத்த திமுகவில் சில மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த இரண்டு தினங்களாக மு.க.ஸ்டாலின் வீட்டில் தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றதாம்.
 
திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலினும் பொதுச்செயலராக துரைமுருகனும் விரைவில் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தலைவராக கருணாநிதியே நீடிப்பார் எனவும் ஸ்டாலினுக்காக செயல் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
 
ஸ்டாலின் வகித்து வரும் பொருளாளர் பதவி எ.வ.வேலுவுக்கு வழங்கப்பட உள்ளதாம். ஸ்டாலினுக்கு ஆதரவாக இருக்கும் துரை முருகனுக்கு பொதுச்செயலாளர் பதவியும் அவர் வகித்து வந்த முதன்மை செயலாளர் பதவி திண்டுக்கல் ஐ.பெரியசாமிக்கும் கொடுக்கப்பட உள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்