தமிழக இளைஞர்களின் திறன் உலகில் ஒளிரட்டும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

வியாழன், 15 ஜூலை 2021 (15:08 IST)
உலக இளைஞர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் இளைஞர்கள் திறன் வளர்ப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக இளைஞர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் இளைஞர்கள் திறன் வளர்ப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் அவர் “இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கான வித்துக்கள்! தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன் அதிகரிக்க அரசின் திட்டங்கள் அமையும் என்பதால்தான் “திறன் மேம்பாட்டு துறை” என்ற புதிய துறை அமைக்கப்பட்டுள்ளது. நம் இளைஞர்களின் திறன் உலக அரங்கில் ஒளிரட்டும்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்