மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல்! – திருவாரூரில் இருந்து பிரச்சாரம் தொடக்கம்!

திங்கள், 15 மார்ச் 2021 (08:27 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் கொளத்தூரில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதற்கான வேட்புமனுவை மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார்.

தேர்தலுக்கு முன்னதாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். தனது தந்தை கருணாநிதியின் பிறந்த ஊரான திருவாரூரிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின் திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்