14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம்! – முதல்வர் தொடங்கி வைத்தார்!

வியாழன், 3 ஜூன் 2021 (11:30 IST)
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் தரும் திட்டத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு நிவாரண பணமும், மளிகை பொருட்களும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ரூ.4 ஆயிரம் நிவாரண தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னதாக முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளில் மீதம் ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கும் திட்டத்தையும், 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கும் திட்டத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்