திருக்குறள் படிச்சு திருந்த பாருங்க! – பாஜகவுக்கு புத்திமதி சொன்ன ஸ்டாலின்!

ஞாயிறு, 3 நவம்பர் 2019 (15:24 IST)
திருவள்ளுவர் ஆடை விவகாரத்தில் தொடர்ந்து பாஜகவினர் திமுகவை குறை கூறி வந்த நிலையில், அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.

தமிழக பாஜக தனது ட்விட்டரில் திருவள்ளுவரின் படத்தை காவி உடை, விபூதியோடு பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. சில திமுகவினர் மற்றும் தி.க கட்சியினர் இதை வன்மையாக கண்டித்து பதிவிட்டனர். அதை தொடர்ந்து #BJPInsultsThiruvalluvar என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் திருவள்ளுவர் காவி உடைதான் அணிந்திருந்தார். திமுக காலத்தில்தான் அதை வெள்ளையாக மாற்றினார்கள் என பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் அவர்களது குற்றச்சாட்டுக்கு பதிலளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ” 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்!” என்று பதிலளித்துள்ளார்.

இதனால் திருவள்ளுவர் ஆடை விவகாரம் மேலும் மேலும் வலுப்பெற்று வருகிறது.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்!

எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும்.

சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்!#BJPInsultsThiruvalluvar

— M.K.Stalin (@mkstalin) November 3, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்