தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உள்ள நிலையில் அவரது துறைகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது தமிழக அரசை ஓ.பன்னீர் செல்வம் இயக்குவதற்கான அனைத்து வாய்ப்புகளும் அவருக்கு உருவாக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.
எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுடன் எதிர்கட்சி துணை தலைவர் துரை முருகன், திமுக எம்.எல்.ஏ.க்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன் ஆகியோரும் தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.