இந்த நிலையில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனித்தனியாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுக்கு துணை நிற்பார்கள் என்றும் இந்த ஈடு செய்ய முடியாத இழப்பிலிருந்து மீண்டுவர பலத்தையும் தைரியத்தையும் நீங்கள் பெற வேண்டுமென விழைகிறேன் என்றும் அவர் அந்த இரங்கல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.