இந்த சம்பவம் திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மு.க.ஸ்டாலின் “எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல்சோர்வு ஏற்பட்டது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி BP மற்றும் ECG சோதனைகள் செய்யப்பட்டன. தற்போது நான் நலமுடன் இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இதனால் திமுக தொண்டர்கள் ஆசுவாசமடைந்துள்ளனர்.