ஆனாலும் ராகுல் தன் முடிவில் மிகவும் பிடிவாதமாகவே இருக்கிறார். அவரை சமாதானப்படுத்த அவரது சகோதரி பிரியங்கா காந்தி இன்று அவரை சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில் ராகுல்காந்தியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் பேசியுள்ளார். திமுக தமிழகத்தில் அதிக இடங்கள் வென்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. அப்போது பேசிய ஸ்டாலின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டாம். தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால் மக்கள் மனதை வென்றிருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.