தற்போது உள்ள நடைமுறைகளிலிருந்து சிலவற்றை நீக்கியும், புதிய முறைகளை இணைத்தும் புதிய கல்வி கொள்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மேலும் சமூக வலைத்தளங்களிலும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கருத்துக்கள் அதிக அளவில் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சமூக நீதி - பன்முகத்தன்மைக்கு எதிரான #NEP2020 ஐ அதிமுக அரசு எதிர்க்காதது ஏன்? தாய்மொழி வளரவும், ஆங்கிலம் கற்று உலகளவில் தமிழகம் சாதிக்கவும் காரணமான பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையைப் பலி கொடுக்கத் திட்டமா?
எம்ஜிஆர்,ஜெயலிலதாவுக்கும் சேர்த்தே துரோகம் செய்ய துணிந்துவிட்டனரா? என கேள்வி எழுப்பியுள்ளதோடு திமுகவை பூச்சாண்டினங்களாக் எவராலும் எதுவும் செய்து விட முடியாது. தமிழ் மக்களையும் திசை திருப்ப முடியாது. பழைய மனுதர்ம ஒடுக்குமுறை மீதான பளபளப்புமிக்க வர்ணப்பூச்சுதான் புதிய கல்விக் கொள்கை.