இது காலதாமதமான நடவடிக்கை - கிரண் பேடி குறித்து ஸ்டாலின் கமெண்ட்!

புதன், 17 பிப்ரவரி 2021 (09:43 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றம் காலதாமதமான நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.

 
புதுவையில் கடந்த கடந்த சில ஆண்டுகளாக முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் கவர்னர் கிரண்பேடி ஆகிய இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது என்பதும் இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்து கொண்டிருந்தனர் என்பதும் தெரிந்ததே.  இதனிடையே புதுவை கவர்னராக இருந்த கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 
 
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றம் காலதாமதமான நடவடிக்கை என தெரிவித்துள்ளார். பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியலையும், மாநிலத்தை பால்படுத்தியதையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, புதுச்சேரியில் அரசியலமைப்புக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன். தார்மீக பொறுப்புகளை உணர்ந்து அரசியலமைப்பு பணிகளை அப்பழுக்கற்ற வகையில் செய்துள்ளேன். 
 
தனக்கு துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பு அளித்த மத்திய அரசுக்கு நன்றி. புதுச்சேரிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அது மக்களின் கையில் உள்ளது என பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்