அப்போது, இவர்களுக்கு முன் சென்ற ரேக்ளா வண்டி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. மாடு திடீரென்று மிரண்டு எதிர்சாலைக்குத் திரும்பியதால், பின்னால் வந்த பிரகாஷின் வாகனம் மாட்டு வண்டியின் மீது மோதியது.
இதுகுறித்து, போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு வந்து புவனேஷ்வரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.