அமைச்சர் விஜயபாஸ்கரை தந்தி டிவி மக்கள் மன்றத்தில் பேச விடாமல் கடும் அமளி! (வீடியோ இணைப்பு)

ஞாயிறு, 26 மார்ச் 2017 (10:29 IST)
பிரபல தமிழ் தொலைக்காட்சியான தந்தி டிவியில் பிரபல தமிழ் செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே நடத்தும் மக்கள் மன்றம் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தலைப்புக்கு ஏற்றவாறு அனைத்து கட்சியையும் சேர்ந்த அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கலந்துகொண்டு பேசுவார்கள்.


 
 
இந்நிலையில் தற்போது ஆர்கே நகர் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருப்பதால், ஆர்கே நகரில் தந்தி டிவி மக்கள் மன்றத்தை நடத்தியது. இந்த தேர்தலில் அதிமுக அம்மா கட்சியை சேர்ந்த டிடிவி தினகரன் போட்டியிடுவதால் அவரது அணி சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேச வந்திருந்தார்.

 

 
 
ஆனால் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கரை பேச விடாமல் வெளியேற சொல்லி மக்கள் பயங்கர கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நிகழ்ச்சியை நடத்தும் ரங்கராஜ் பாண்டே பொதுமக்களை அமைதியாக இருக்க அறிவுறுத்தினார். பொதுமக்கள் சார்பில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்