அசாம் மாநிலத்தில் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள கவுகாத்தியில் சில்சகோ ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்றும்படி அரசு உத்தரவிட்டிருந்தது. இப்பகுதியில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு இழப்பீடு அளிக்கப்படும் என்று அரசு கூறியிருந்தது.
இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது இரு பெண்கள் தங்கள் உடைகளை களைந்து அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென்று அரைநிர்வாணத்தில் இருந்து முழு உடைகளையும் கழற்றி போராடிய அவர்களை அங்கு நின்றிருந்த பெண் போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.