டாஸ்மாக் இரவு 10 வரை மட்டுமே இயங்கும், அதிக விலைக்கு விற்க கூடாது: அமைச்சர் செந்தில் பாலாஜி

வெள்ளி, 26 மே 2023 (17:11 IST)
டாஸ்மாக்  கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
அனைத்து மாவட்ட டாஸ்மாக்  மேனேஜர்களுக்கு அவர் கூறிய அறிவுறுத்தலில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் நண்பர்கள் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விளக்கி விற்பனை செய்யக்கூடாது என்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதல் விற்பனை விலை பட்டியல் வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
டாஸ்மாக்  கடைகளில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் விற்பனை செய்யப்படுவதாகவும் 24 மணி நேரமும் மது கிடைப்பதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து இந்த அறிவுறுத்தல்களை செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்