ரெய்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கார் உடைப்பு: கரூரில் பரபரப்பு..!

வெள்ளி, 26 மே 2023 (10:08 IST)
சென்னை கரூர் கோவை உள்பட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் இடங்களில் திமுக தொண்டர்கள் குவிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
குறிப்பாக  கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சோதனை செய்ய வந்த அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை முற்றுகையிட்ட திமுக தொண்டர்கள் முயற்சி செய்ததாகவும், திமுக தொண்டர்களில் ஒருவரை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. திமுக தொண்டர்களின் எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்