தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க சமீப வாரங்களில், வாரத்திற்கு இருமுறை என தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த வாரத்திற்கு பிறகு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தடுப்பூசி முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதுதவிர மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி மையம் செயல்பட்ட நிலையில் இனி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.