ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பின் கமலாலயம் வந்த தமிழிசை: உற்சாக வரவேற்பு..!

Mahendran

புதன், 20 மார்ச் 2024 (11:46 IST)
தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று அவர் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம்  வந்த நிலையில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் திருநெல்வேலி அல்லது   நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கவர்னர் பதவியை ராஜினாமா செய்த பின் முதல் முறையாக தமிழிசை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சற்று முன் வருகை தந்தார். அவருக்கு பாஜக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில் இன்று பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்