ஜப்பானுக்கு சுற்றுலா செல்லும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்..!

திங்கள், 6 பிப்ரவரி 2023 (07:43 IST)
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்  மா பாலசுப்பிரமணியன் அவர்கள் ஜப்பானுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஜப்பான் நாட்டில் புற்றுறுநோய் சிகிச்சை மற்றும் மேலாண்மை நெறிமுறைகளை அறிந்து கொள்வதற்காக அமைச்சர் மா சுப்பிரமணியன், சுகாதாரச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் 5 நாள் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இது குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக சுகாதார குழு ஜப்பான் செல்கிறது என்றும் அந்த குழுவில் உள்ள டாக்டர்களுக்கு ஜப்பானில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் பயிற்சிக்கு பின்னர் அந்த டாக்டர்கள் தமிழகத்தில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 ஆயிரம் புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டு ஆரம்ப நிலையிலேயே அவர்களுக்கு சிகிச்சை அளித்து முழுமையாக இதன் மூலம் குணப்படுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்