இதெல்லாம் சாதாரணமப்பா... மீனவர்களை கண்டுபித்த களிப்பில் ஜெயகுமார்!

செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (10:24 IST)
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜூலை மாதம் மீன்பிடிக்க சென்றபோது மாயமான மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 
 
இது குறித்து மீன்வளத்துரை அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜூலை மாதம் மீன்பிடிக்க சென்றவர்கள் 9 மீனவர்கள் மாயமானர். தொடர்ந்து தேடுதல் முயற்சி மேற்கொண்டு, மத்திய அரசிற்கும் அழுத்தம் கொடுத்து அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
 
எஞ்சின் கோளாறு காரணமாகவும், காற்றின் வேகம் காரணமாக அண்டை நாட்டில் மீனவர்கள் தஞ்சம் அடைவது வழக்கம். அந்த வகையில் மலேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், மியன்மார் ஆகிய நாடுகளுக்கு மீனவர்கள் குறித்து தகவல் அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில் பர்மா, மியன்மார் நாடுகளில் தொடர்பு கொண்ட போது, மீனவர்கள் அங்கு பத்திரமாக இருப்பதாக உறுதி தகவல் தெரிவித்தனர். அதேபோல் மீனவர்கள், அவர்களின் படகுகள் ஆகிய புகைப்படத்தை அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் நம் மீனவர்கள் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும் மீனவர்கள் பத்திரமாக நம் நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். விரைவாக 1 வாரத்தில் தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர் அதன் பின் மீனவர்கள் குடும்பத்தினர்க்கு தலா ரூ.10 ஆயிரத்தை வழங்கினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்